சேலத்தில் அரிய வகை ஆந்தை மீட்பு


சேலத்தில் அரிய வகை ஆந்தை மீட்பு
x
தினத்தந்தி 31 Jan 2021 11:14 AM IST (Updated: 31 Jan 2021 11:14 AM IST)
t-max-icont-min-icon

அரிய வகை ஆந்தை மீட்பு

சேலம்:
சேலம் அம்மாபேட்டை விவேகானந்தர் தெருவில் அரிய வகை ஆந்தை ஒன்று பறக்க முடியாத நிலையில் இருந்தது. இதை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். மேலும் அவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு வந்து ஆந்தையை பத்திரமாக மீட்டனர். இந்த ஆந்தையை வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும் போது, ‘அம்மாபேட்டை குமரகிரி ஏரி பகுதிக்கு தற்போது அரிய வகை பறவைகள் வருகின்றன. இதனால் அங்கு வந்த இந்த அரிய வகை ஆந்தை வழிதவறி குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது’ என்றனர்.

Next Story