கெங்கவல்லி அருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு


கெங்கவல்லி அருகே  கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 31 Jan 2021 11:14 AM IST (Updated: 31 Jan 2021 11:14 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி ஊராட்சியில் மதுரை வீரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வம். இவர் நேற்று தனது விவசாய தோட்டத்தில் பசுமாட்டை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 50 அடி ஆழ கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்த அந்த மாடு எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இது குறித்து உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர் பசுவை கயிறு கட்டி உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Next Story