கரூர் சணப்பிரட்டியில் ரூ.51 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை


கரூர் சணப்பிரட்டியில் சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமிபூஜையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் போது
x
கரூர் சணப்பிரட்டியில் சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமிபூஜையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் போது
தினத்தந்தி 31 Jan 2021 11:24 AM IST (Updated: 31 Jan 2021 11:24 AM IST)
t-max-icont-min-icon

கரூர் சணப்பிரட்டியில் சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமிபூஜையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

கரூர்:
கரூர் நகராட்சி 33-வது வார்டு சணப்பிரட்டியில் நேற்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ரூ.51 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான ஆதிதிராவிடர் நல நவீன சமுதாய கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, நவீன சமுதாய கூடம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். 
முன்னதாக போக்குவரத்துத்துறையின் சார்பில் கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட கும்பகோணம், திருச்சி, கரூர், காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில், டிரைவர், கண்டக்டர்,, பல்வேறு நிலை அலுவலர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற 780 தொழிலாளர்களுக்கு ரூ.186 கோடியே 51 லட்சம் மதிப்பிலான பணப்பயன்களுக்கான காசோலைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் இன்றையும் சேர்த்து (நேற்று) இதுவரை பணப்பயனாக 1.87 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.6,958 கோடியே 45 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வழங்கப்படுகின்றது என்றார். 
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தானேஷ் என்கிற முத்துக்குமார், நகராட்சி ஆணையர் சுதா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தின் மேலாண்மை இயக்குனர் பொன்முடி, திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், போக்குவரத்துத்துறை மண்டல பொது மேலாளர்கள் குணசேகரன் (கரூர்), செந்தில் (கும்பகோணம்), ராஜ்மோகன் (திருச்சி), மாரியப்பன் (நாகப்பட்டினம்) உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story