கரூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


கரூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தப்பட்டபோது எடுத்த படம்.
x
கரூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தப்பட்டபோது எடுத்த படம்.
தினத்தந்தி 31 Jan 2021 11:26 AM IST (Updated: 31 Jan 2021 11:26 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கரூர்:
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, கரூர் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் சங்கம் சார்பில் கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ஆசாத் பூங்காவில் காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காந்திசிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஓம்சக்தி சேகர் முன்னிலை வகித்தார். இதில் ஆலோசகர் காமராஜ், இணைச்செயலாளர் தண்டபாணி, பொருளாளர் பாஸ்கர், செயற்குழு உறுப்பினர் ராசப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Next Story