ஆரணி, குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி


ஆரணி, குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 31 Jan 2021 6:13 PM IST (Updated: 31 Jan 2021 6:13 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆரணி

ஆரணியை அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 35), பட்டு நெசவு தொழிலாளி.  நேற்று  இவர் வீட்டின் அருகே உள்ள பாறை குளத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவருடைய மோட்டார்சைக்கிள் மட்டும் குளத்தின் அருகே இருப்பதாக தகவல் வந்தது. 

அதைத்தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது அவரை காணவில்லை. எனவே கால்தவறி குளத்தில் விழுந்து இருக்காலாம் என குளத்தில் இறங்கி தேடினர். அப்போது அவர் குளத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டது.

இதுகுறித்து அவருடைய அண்ணன் மோகன்ராம் என்பவர் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story