நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை கோட்ட தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் அய்யப்பன், கணேசன், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெயில்வே துறையை தனியார் மயமாக்கக்கூடாது, அதுபோல் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது, புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொழிற்சங்க நிர்வாகிகள் தர்மன், சுப்பிரமணியன், உலகநாதன், சந்தானம், அந்தோணி ஆரோக்கியராஜ் உள்பட ரெயில்வே ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொழிற்சங்க நிர்வாகி இந்திர ராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story