மாவட்ட செய்திகள்

சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடம் அ.தி.மு.க.வினர் புகார் + "||" + The AIADMK has lodged a complaint with the Commissioner of Police urging him to take action against Sasikala

சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடம் அ.தி.மு.க.வினர் புகார்

சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடம் அ.தி.மு.க.வினர் புகார்
கட்சிக்கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம், அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர்.
சேலம்,

சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க. செயலாளர்கள் சண்முகம், பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் கமிஷனர் செந்தில்குமாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். 

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த மாதம் 25-ந் தேதி சேலம் லைன்மேட்டில் அ.ம.மு.க. கட்சி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அவதூறாக பேசி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

சசிகலா காரில் அ.தி.மு.க. கொடி

இதேபோல் சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க. துணை செயலாளர் வினாயகம் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரை சந்தித்து ஒரு புகார் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கினார். இந்த நிலையில் சசிகலா தனது காரில் அ.தி.மு.க. கட்சிக்கொடியை சட்ட விரோதமாக பயன்படுத்தி உள்ளார். இது கண்டனத்துக்குரியது.

எனவே அ.தி.மு.க. கட்சிக்கொடியை பயன்படுத்திய சசிகலா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதி்ல் அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வர மறுப்பு; திரிஷா மீது பட அதிபர் புகார்
ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு திரிஷா வராததால், அவர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பட அதிபர் புகார் கொடுத்து இருக்கிறார்.
3. 'என்னுடைய போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன' தொலைதொடர்புத்துறை செயலாளரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார்
'என்னுடைய போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன' தொலைதொடர்புத்துறை செயலாளரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார்.
4. எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்லை திருடினார் உதயநிதி ஸ்டாலின்; பா.ஜ.க. நிர்வாகி பரபரப்பு புகார்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை திருடியுள்ளார் என பா.ஜ.க. நிர்வாகி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
5. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார்; தி.மு.க.வினர் சாலை மறியல்
வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா செய்வதாக கூறி கொடுத்த புகாரை போலீசார் வாங்க மறுத்ததால் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.