வேலூர், அரசு ஊழியர்கள் சாலை மறியல்


வேலூர், அரசு ஊழியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Feb 2021 12:44 PM GMT (Updated: 2 Feb 2021 12:44 PM GMT)

வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்ட தலைவர் சரவணராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் ஆண்டாள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய நடைமுறையை தொடர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். 

பின்னர் அரசு ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பியபடி சத்துவாச்சாரியில் இருந்து புதிய பஸ்நிலையம் நோக்கி செல்லும் சென்னை -பெங்களுரு அணுகுசாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

அதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் (வடக்கு), லதா (தெற்கு) தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 36 பேரை கைது செய்தனர். 

பின்னர் அவர்களை அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story