கால்பந்து

கீழக்கரை அருகே ஐவர் கால்பந்து போட்டி + "||" + Football match

கீழக்கரை அருகே ஐவர் கால்பந்து போட்டி

கீழக்கரை அருகே ஐவர் கால்பந்து போட்டி
கீழக்கரை அருகே ஐவர் கால்பந்து போட்டி நடந்தது.
கீழக்கரை, 

கீழக்கரை அருகே உள்ள பெரியப்பட்டினத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் இளைஞர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் கே.பி.எஸ். அணியும, ஜோக்கர் அணியும் மோதின. 

இதில் கே.பி.எஸ். அணியினர் முதல் பரிசையும், ஜோக்கர் அணியினர் 2-வது பரிசையும் வென்றனர். போட்டியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார். 

திருப் புல்லாணி ஒன்றிய கவுன்சிலரும் எ.ஸ்.டிபி.ஐ. மாவட்ட செயலாளருமான பைரோஸ்கான், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரியாஸ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் டிவிஷன் தலைவர் பஷீர் அலி, நகர் தலைவர் அன்வர் அலி மற்றும் அஸ்கர், இக்பால் உள்பட விளையாட்டு குழுவை சேர்ந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசினை வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி
மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் ஒய்.பி.ஆர்.ஏ. அணி முதலிடம் பிடித்தது.
2. சோனி சேனலில் யூரோ கால்பந்து போட்டி தமிழில் ஒளிபரப்பு
சோனி சேனலில் யூரோ கால்பந்து போட்டி தமிழில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.