மாவட்ட செய்திகள்

போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது + "||" + Worker arrested under Pocso Act

போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்
கந்தம்பாளையம், 

கந்தம்பாளையம் அருகே உள்ள கூடச்சேரி மேலப்பட்டி போயர் தெருவை சேர்ந்த கொண்டன் மகன் சந்தோஷ்குமார் (வயது 21). இவர் கூலி வேலை செய்து வருகிறார். 

சந்தோஷ்குமாருக்கும், பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் அவர் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார். இதனால் மகளை காணாத அவளது தாய் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். 

இந்தநிலையில் நேற்று இருவரும் திருச்செங்கோட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் செல்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இருவரையும் மணியனூர் பஸ் நிறுத்தத்தில் போலீசார் மடக்கிப்பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷ் குமாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மாணவியை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அடுத்தவரின் வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.78 லட்சம் சுருட்டல் மோசடி நபர் கைது
அடுத்தவரின் வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.78 லட்சம் சுருட்டல் மோசடி நபர் கைது.
2. கடன் வாங்கி தருவதாக தொடர்ந்து மோசடி: முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
கடன் வாங்கி தருவதாக தொடர்ந்து மோசடி: முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது.
3. காஷ்மீரில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை; பயங்கரவாதி கைது
காஷ்மீரில் இரு பயங்கரவாத வழக்குகளில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பயங்கரவாதியை கைது செய்துள்ளனர்.
4. வாலாஜாபாத் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
வாலாஜாபாத் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது.
5. மறைமலைநகர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
மறைமலைநகர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது.