ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2021 9:16 PM GMT (Updated: 2021-02-03T02:46:46+05:30)

ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி,

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் எஸ்.ஆர்.எம். யு. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரெயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், ஆட்குறைப்பு செய்வதை கைவிட வேண்டும், ரெயில்வே சொத்துக்களை விற்பதை தடுத்து நிறுத்த வேண்டும், தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு எஸ். ஆர். எம். யு. தொழிற்சங்கத்தின் துணை பொதுச் செயலாளரும், திருச்சி கோட்ட செயலாளருமான வீரசேகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்ட முடிவில் அவர் பேசுகையில் ‘ரெயில்வே தனியார் மயமாக்கப்பட்டால் மக்கள் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதனால் ஏற்படும் ஆபத்துகள் எப்படி வரும் என்பது பற்றி இந்தியா முழுவதும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தும், முக்கிய பிரமுகர்களை சந்தித்து விளக்கி வருகிறோம். வக்கீல்கள், டாக்டர்கள், சிறுகுறு தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், பொதுநல வாதிகள் என அனைத்து தரப்பு மக்களிடமும் பிரசாரம் செய்து வருகிறோம். ரெயில்வே தனியார்மயம் என்பது தனிப்பட்ட ரெயில்வே தொழிலாளர்களின் பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மக்களையும் அது பாதிக்கும் என்பதால் தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்' என்றார்.

Next Story