மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 2 Feb 2021 11:03 PM GMT (Updated: 2021-02-03T04:40:33+05:30)

மேட்டூா் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

மேட்டூர்,

மேட்டூா் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த வாரம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. குறிப்பாக கடந்த 1-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 1,014 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 152 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது தண்ணீர் திறந்து விடப்படும் அளவை விட நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 105.89 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 105.78 அடியாக குறைந்துள்ளது.

Next Story