மாவட்ட செய்திகள்

கடையம் அருகே யானைகள் அட்டகாசம் + "||" + Elephants damaged trees

கடையம் அருகே யானைகள் அட்டகாசம்

கடையம் அருகே யானைகள் அட்டகாசம்
கடையம் அருகே யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.
கடையம் ராமநதி அணைக்கு மேற்கு பகுதியில் வெய்க்கால்பட்டியை சேர்ந்த குமரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.  நேற்று முன்தினம் இரவு இந்த தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து தென்னை மரங்களை பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதில் 91 தென்னை மரங்கள் சேதம் அடைந்தன. பின்னர் அந்த யானைகள் காட்டிற்குள் சென்று விட்டன. 

இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் இரவு நேரங்களில் யானைகள் தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விளைநிலங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்
ஒட்டன்சத்திரம் அருகே விளைநிலங்களில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகிறது.
2. தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
பூதப்பாண்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன. வாழை, தென்னை மரங்களை பிடுங்கி எறிந்து நாசம் செய்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
3. வேப்பனப்பள்ளியில் வாழை தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
வேப்பனப்பள்ளியில் வாழை தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.