ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா


ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
x
தினத்தந்தி 3 Feb 2021 5:42 AM GMT (Updated: 3 Feb 2021 5:44 AM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கரூர்,

முடக்கப்பட்ட 21 மாத நிலுவைத் தொகை மற்றும் அகவிலைப்படியை உடனடியாக வழங்கிட வேண்டும். அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 9 மாத காலமாக வழங்கப்படாத குடும்ப நல நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கான செலவு தொகை முழுவதையும் காப்பீட்டு நிறுவனமே ஏற்க வேண்டும் என ஆணையிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மோகன்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் துணைத்தலைவர்கள் மோகன், சண்முகம் மற்றும் இணை செயலாளர்கள், தணிக்கையாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story