சோளிங்கரில் சரக்கு லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
சோளிங்கரில் சரக்கு லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
சோளிங்கர்
சோளிங்கரில் சரக்கு லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மார்க்கெட் பகுதியில் பகல் நேரங்களில் லாரிகள் தங்கள் சரக்குகளை இறக்குவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் சரக்கு லாரிகளால் அவசர தேவைகளுக்கு செல்லமுடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
எனவே, உடனடியாக காவல்துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story