பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கு காவல் நீட்டிப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கோவை
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கூறி திருநாவுக்கரசு (வயது 27) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. போலீசாருக்கு மாற்றப்பட்டது. கைதான 5 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பிருப்பதாக கூறி பொள்ளாச்சி வடுகப்பாளையத்தை சேர்ந்த கே.அருளானந்தம் (34), ஹேரேன்பால் (29), பைக் பாபு (27) ஆகிய 3 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் கைதான 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களையொட்டி காணொலி காட்சி மூலம் 3 பேரையும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து 3 பேரின் காவலையும் வருகிற 17-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story