புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல்


புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல்
x
தினத்தந்தி 4 Feb 2021 1:16 AM IST (Updated: 4 Feb 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

2-வது நாளாக நேற்றும் பழைய பஸ் நிலையம் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுத்துறையில் அவுட்சோர்சிங் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மற்றும் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கிராமப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. 

மறியல் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story