திருவண்ணாமலையில் தொழிலாளர் சட்டத் தொகுப்பு நகல் எரிப்பு
திருவண்ணாமலையில் தொழிலாளர் சட்டத் தொகுப்பு நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர் சட்டத் தொகுப்பு நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. தொ.மு.ச. மாநில பொறுப்பாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
இதில் தொழிலாளர் சட்டத் தொகுப்பு நான்கையும், மின்சார சட்டம் 2020 திரும்பப்பெற வேண்டும். தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். அனைத்து கட்டிட, உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 7,500 வழங்கிட வேண்டும். மத்திய அரசு பட்ஜெட்டில் உள்ள மக்கள் விரோத அம்சங்களை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து தொழிலாளர் சட்டத் தொகுப்பு நகல் எரிக்கப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அதனை அணைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story