நெல்லையில் புதிய வேளாண் சட்ட நகல்களை கிழித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்
நெல்லையில் தொழிற்சங்கத்தினர் புதிய வேளாண் சட்ட நகல்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்ட மசோதா, தொழிலாளர் விரோத சட்டங்கள் போன்றவற்றை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி, அவற்றின் நகல்களை கிழித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். அனைத்து தொழிற்சங்கத்தினர், சட்ட நகல்களை கிழிக்க முயன்றபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தொழிற்சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிதநேரம் பரபரப்பு நிலவியது. இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story