பெரம்பலூர் அருகே வேகமாகவும், அதிக பாரம் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
பெரம்பலூர் அருகே அதிவேகமாகவும், அதிக பாரம் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம், நெடுவாசல், எறையூர் மற்றும் கல்பாடி ஆகிய கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் கல்குவாரிகள், கிரஷர்களில் இருந்து டிப்பர் லாரிகள் அதிக வேகமாகவும், அதிக பாரம் ஏற்றியும் சென்று வந்தனர். இதனால் அந்தப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
மேலும் சாலைகளும் சேதமடைந்தன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்தப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதும், அதிக பாரம் ஏற்றி செல்வதும் தொடர்ந்து வந்தது.

லாரிகள் சிறைபிடிப்பு
இதனால் ஆத்திரமடைந்த நெடுவாசல் கிராம மக்கள் நேற்று அந்த வழியாக வந்த 20-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து வந்த மருவத்தூர் போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இனிமேல் டிப்பர் லாரிகளை மெதுவாகவும், சரியான அளவு பாரம் ஏற்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து சிறைபிடித்த லாரிகளை பொதுமக்கள் விடுவித்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story