கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அன்னதானம்


கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அன்னதானம்
x
தினத்தந்தி 4 Feb 2021 6:41 AM IST (Updated: 4 Feb 2021 6:43 AM IST)
t-max-icont-min-icon

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அன்னதானம் நடந்தது.

க. பரமத்தி,

கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முக்கிய நாட்களில் அன்னதானம் நடைபெறுவது வழக்கம். அதேபோல விருப்பப்பட்டவர்கள், வேண்டுதல் வைத்துள்ளவர்கள் சிறப்பு அன்னதானம் வழங்குவார்கள். இதேபோல நேற்று அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கோவிலில் 150-க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. எப்பொழுதும் அன்னதான மண்டபத்தில் பரிமாறி உணவு வழங்குவார்கள். ஆனால் கொேரானா காலத்தை முன்னிட்டு உணவு பொட்டலங்களாக தயாரிக்கப்பட்டது. இந்த அன்னதானத்தை உதவி ஆணையர் சூரியநாராயணன் தொடங்கி வைத்து அங்குள்ள ஏழைகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். இதில் கோவில் செயல் அலுவலர் சங்கரன், அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்

Next Story