பெட்ரோல் கேனுடன் வந்த சத்துணவு அமைப்பாளரால் பரபரப்பு
பெட்ரோல் கேனுடன் வந்த சத்துணவு அமைப்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சேர்ந்த ராஜா மனைவி சவிதா (வயது 34). இவர் இரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை தற்கொலை செய்து கொள்வதற்காக பெட்ரோல் கேனுடன் தனது 3 மாத ஆண் கைக்குழந்தையுடன் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தார். இதை அறிந்த பாடாலூர் போலீசார் அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கினர். பின்னர் சவிதா தனது கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ஏற்கனவே சவிதா இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்த போது, அவரை மாவட்ட நிர்வாகம், சிறுகன்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்தது. இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிமாறுதல் வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு பலனாக, அவருக்கு இரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பணி கிடைத்தது. இந்நிலையில் அந்த பள்ளியில் சவிதா பணிக்கு சேர்ந்து ஒரு மாதம் கடந்த நிலையில் இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லையாம். மேலும் மருத்துவ செலவிற்காக சத்துணவு கூட்டுறவு சங்கம் மூலம் கடன் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளால் அழைக்கழிக்கப்பட்டு சம்பளமும், கடன் தொகையும் கிடைக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த சவிதா அதிகாரிகளை கண்டித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக பெட்ரோல் கேனுடன் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளும், போலீசாரும் கூறியதை தொடர்ந்து சவிதா தர்ணாவை கைவிட்டார்.

Related Tags :
Next Story