ஜவுளி நிறுவன அதிபர் உள்பட 2 பேர் தற்கொலை


ஜவுளி நிறுவன அதிபர் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 4 Feb 2021 7:30 AM IST (Updated: 4 Feb 2021 7:34 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சம்பவங்களில் ஜவுளி நிறுவன அதிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கரூர்,

தாந்தோணிமலை அருகே உள்ள முத்தாலம்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). ஜவுளி நிறுவன அதிபரான இவர், கரூர் காமராஜர் புரத்தில் ஜவுளி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஜவுளி நிறுவனம் நடத்தியதில் சேகருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சேகர் மது பழக்கத்திற்கு அடிமையாகி நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சேங்கல்லை சேர்ந்தவர் லட்சுமணன் (29). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகன்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் கரூர் ராயனூர் நேதாஜி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். தற்போது சுகன்யா  9 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் லட்சுமணன் சரியாக வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையானார்.இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த லட்சுமணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story