மத்திய தொழிற்சங்கத்தினர் சட்டநகலை எரித்து போராட்டம்
மத்திய தொழிற்சங்கத்தினர் சட்டநகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும், மின்சார திருத்த சட்டம் 2020-யையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நேற்று மாலை கரூர் ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு எல்.பி.எப். மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். இதில் எல்.பி.எப்., ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.யூ.டி.யூ.சி., எம்.எல்.எப்., எல்.எல்.எப்., உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர ஈடுபட்டனர். பின்னர் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
Related Tags :
Next Story