பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 4 Feb 2021 3:12 AM GMT (Updated: 4 Feb 2021 3:14 AM GMT)

சின்னசேலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சின்னசேலம், 

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக புன்னகை தேடி என்ற சிறப்பு திட்டத்தின் நோக்கம் குறித்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு  நிகழ்ச்சி காவல்துறை சார்பில் சின்னசேலம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் கலந்து கொண்டு பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை எவ்வாறு மீட்டு மறுவாழ்வு அளிப்பது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி பேசினர்.  பின்னர் சேலம் மெயின் ரோடு, ரெயில் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை போலீசார் வழங்கினர்.  இதில் மாவட்ட குழந்தை ஆலோசகர் முருகன், உதவி தொழிலாளர் ஆய்வாளர் கருணாநிதி, மகளிர் போலீசார் பச்சையம்மாள், லட்சுமாயி, குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

Next Story