9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 4 Feb 2021 9:55 AM IST (Updated: 4 Feb 2021 9:55 AM IST)
t-max-icont-min-icon

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நேற்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் வருகிற 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

சென்னை, 

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கடந்த ஆண்டு மே மாதம் 5-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கவிருந்த பிரம்மோற்சவ விழா, கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நடைபெறவில்லை.

இந்தநிலையில் பார்த்தசாாரதி கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று இரவு புன்னைமர வாகனத்தில் சாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது.

9-ந்தேதி தேரோட்டம்

பிரம்மோற்சவ விழா வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சேஷ வாகனம், சிம்ம வாகனம், அம்ச வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை, அனுமந்த வாகனம், ஆனந்த விமானம், குதிரை, ஆளும் பல்லக்கு, கண்ணாடி பல்லக்குகளில் சாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு கருட சேவை மற்றும் கோபுரவாசல் தரிசனமும், பகல் 12 மணிக்கு ஏகாந்த சேவையும் நடக்கிறது. 7-ந்தேதி காலை 5.30 மணிக்கு நாச்சியார் திருக்கோலமும், வருகிற 9-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டமும் நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சியுடன் தேரோட்டம் தொடங்குகிறது.

தீர்த்தவாரி

அதைத்தொடர்ந்து 10-ந்தேதி காலை 6.15 மணிக்கு வெண்ணெய்தாழி கண்ணன் திருக்கோலம், 11-ந்தேதி பகல் 11 மணிக்கு தீர்த்தவாரி, 12-ந்தேதி இரவு 10 மணிக்கு சப்தாவர்னம்- சிறிய திருத்தேர் நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

விழா நாட்களில் மாலை 5.30 மணிக்கு பக்தி நிகழ்ச்சிகளும், வருகிற 13-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரை விடையாற்றி உற்சவம் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

Next Story