7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 35 பேர் கைது


7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 35 பேர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2021 10:35 AM IST (Updated: 4 Feb 2021 10:35 AM IST)
t-max-icont-min-icon

7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2- வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார்.

35 பேர் கைது

இதில் திரளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் திடீரென சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில். அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 35 பேரை போலீசார் கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 40 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story