ரூ.400 கடனை திருப்பி தராததால் மின்கம்பத்தில் தலையை மோத செய்து வாலிபர் கொலை


ரூ.400 கடனை திருப்பி தராததால் மின்கம்பத்தில் தலையை மோத செய்து வாலிபர் கொலை
x
தினத்தந்தி 4 Feb 2021 7:19 PM IST (Updated: 4 Feb 2021 7:19 PM IST)
t-max-icont-min-icon

ரூ.400 கடனை திருப்பி தராத ஆத்திரத்தில் தலையை மின்கம்பத்தில் மோத செய்து வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

அம்பர்நாத், 

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் கேம்ப் -5 சாய்நாத் காலனி பகுதியை சேர்ந்தவர் பாகிம்(வயது20). இவர் அதே பகுதியை சோந்த சோனு என்பவரிடம் ரூ.400-ஐ கடனாக பெற்று இருந்தார்.

இந்தநிலையில் நேற்று 11.30 மணி அளவில் தனது பணத்தை திரும்பி தருமாறு சோனு கேட்டு உள்ளார். இதற்கு பாகிம் பின்னர் தருவதாக கூறியதால் சோனுவிற்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாகிமை பிடித்து சரமாரியாக தாக்கினார்.

மேலும் அவரது தலையை பிடித்து அருகில் உள்ள மின்கம்பத்தில் மோத செய்தார். இதில் பாகிம் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இதையடுத்து சோனு உள்பட அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது பற்றி தகவல் அறிந்த ஹில்லைன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாகிமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் அவரை கொலை செய்த கூட்டாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story