ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருவார சிறப்பு வழிபாடு
குருபகவான் கோவிலில் குருவார சிறப்பு வழிபாடு
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்குரிய கோவிலான இங்கு குருவாரத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
இதை முன்னிட்டு கோவிலில் உள்ள கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வரபகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story