புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை


புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Feb 2021 10:35 PM IST (Updated: 4 Feb 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

போடியில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போடி:

போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் விக்ரம் (வயது 29). விவசாயி. இவரது மனைவி கவிதா (19). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. 

இந்த நிலையில் விக்ரமுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை கவிதா கண்டித்தார். 

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

அப்போது விக்ரம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக ஒரு அறைக்குள் சென்றார். அங்கு மனைவியின் சுடிதார் துப்பட்டாவை எடுத்து தூக்கு மாட்டினார். 

அதில் கழுத்து இறுகியதால் உடனே காப்பாற்றும்படி அவர் அலறினார். கவிதா மற்றும் அக்கம்பக்கத்தினர் விக்ரமை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விக்ரம் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.   

Next Story