விருதுநகரில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 575 ஆக உள்ளது. நேற்று முன் தினம் வரை 3 லட்சத்து 97 ஆயிரத்து 567 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 575 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதுவரை 16 ஆயிரத்து 372 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 10 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் இம்மாவட்டத்தில் நோய் பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story