மளிகை கடைக்காரரிடம் பண மோசடி புகார்: பெண் போலீஸ் மீது வழக்குப்பதிவு
மளிகை கடைக்காரரிடம் பண மோசடி புகார் தொடர்பாக பெண் போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பணகுடி அருகே லெப்பைகுடியிருப்பைச் சேர்ந்தவர் தங்கராணி. இவர் திருக்குறுங்குடி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் ராதாபுரத்தைச் சேர்ந்த மளிகை கடைக்காரரான சிவபிரேம்குமாரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியதாகவும், பின்னர் அதனை திருப்பி கொடுக்காமல், சிவபிரேம்குமாருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராதாபுரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தன்னை தங்கராணி வழிமறித்து தாக்கியதாக கூறி, சிவபிரேம்குமார் ராதாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், இதுதொடர்பாக சிவ பிரேம்குமார் ராதாபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், தங்கராணி மீது ராதாபுரம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story