அச்சன்புதூரில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அச்சன்புதூரில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சன்புதூர்,
முகமது நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜனதாவை சேர்ந்த கல்யாணராமனை கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் அச்சன்புதூரில் அவுலியா மீராஷா ஜூம்ஆ பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜமாஅத் தலைவர் உக்காசிம் மீரான்கனி தலைமை தாங்கினார். ஜமாஅத் செயலாளர் முகமது கனி ஜலீல், பொருளாளர் சேகுமைதீன், ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் சேக்முகம்மது, முஸ்லிம் லீக் நகர தலைவர் ரெசவு மைதீன், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொருளாளர் முகம்மது நயினார், த.மு.மு.க. ஊடகப்பிரவு செயலாளர் ஆதம் காசியார், வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் சேக்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் நாகூர்கனி வரவேற்று பேசினார். ம.ஜ.க. மாவட்ட செயலாளர் பீர்மைதீன், த.மு.மு.க. மாநில செயலாளர் நயினார் முகம்மது, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பேச்சாளர் காஜா மைதீன் ரியாஜி, ம.ம.க. மாவட்ட தலைவர் முகம்மது யாக்கூப், ம.ஜ.க. தலைமை பேச்சாளர் இனாயத்துல்லாக் உள்பட பலர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் அகமது அலி ரஜாய் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story