களிமண்ணால் அம்மாயி- பாட்டன் பொம்மை செய்து கிராம மக்கள் நூதன வழிபாடு


களிமண்ணால் அம்மாயி- பாட்டன் பொம்மை செய்து கிராம மக்கள் நூதன வழிபாடு
x
தினத்தந்தி 5 Feb 2021 6:22 AM IST (Updated: 5 Feb 2021 6:24 AM IST)
t-max-icont-min-icon

களிமண்ணால் அம்மாயி- பாட்டன் பொம்மை செய்து கிராம மக்கள் நூதன வழிபாடு நடத்தினா்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் அம்மாயி-பாட்டன் மூதாதையர்கள் வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பொங்கல் மற்றும் தைப்பூசத்திற்கு பின்பு நடைபெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன அடையாளம் தெரியாத மூதாதையர்கள் கரடுமுரடான நிலங்களை திருத்தியும், நெருப்பு, சக்கரம் உள்ளிட்ட உபகரணங்களை கண்டுபிடித்தும் தற்போது வாழும் வாழ்க்கையை செம்மைப்படுத்தி உள்ளனர். அதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூதாதையர் வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு அம்மாயி-பாட்டன் நூதன வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது. கிராம மக்கள் மூதாதையர்களின் உருவம் போன்று களிமண்ணால் பொம்மை செய்து, அவற்றை கன்னிப்பெண்களின் தலையில் சுமந்து வரச்செய்து, ஊரின் நடுவில் பந்தல் அமைத்து அதில் வைத்து நள்ளிரவில் வழிபட்டனர். மூதாதையர்களின் உருவ பிரதிமைகளுக்கு மாவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். பின்னர் விடியும் வரை காவல் காத்து காலையில் சூரிய ஒளியில் தென்பட்டவுடன் உருவபொம்மைகளை நீர்நிலைகளுக்கு மேளதாளங்கள் முழங்க ெகாண்டு சென்று, கரைத்து விட்டு வீடுகளுக்கு திரும்பினர். இதனையொட்டி பெண்கள் குலவையிட்டு, கும்மி பாட்டுக்களை பாடி கோலாட்டம் ஆடினர். நாட்டுப்புறப்பாடல்களும் பாடப்பட்டன.

Next Story