மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 5 Feb 2021 6:24 AM IST (Updated: 5 Feb 2021 6:27 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

கல்லல்,

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே கீழக்கோட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34). இவரும் இதே ஊரைச் சேர்ந்த போஸ் என்பவரும் நேற்று முன்தினம் இரவு கீழக்கோட்டையில் இருந்து கல்லல் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

அதே நேரத்தில் கல்லலில் இருந்து எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் காரைக்குடிைய சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்னேஷ்(25), அவரது நண்பர்கள் தருண்குமார்(15), செல்லத்துரை(24) ஆகியோர் வந்து கொண்டு இருந்தனர். செம்பனூர் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். 

108 ஆம்புலன்ஸ் மூலம் போஸ், ராஜ்குமாரை சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மற்றொரு ஆம்புலன்சில் விக்னேஷ், தருண்குமார், செல்லத்துரை ஆகியோரை ஏற்றி காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமாரும், விக்னேசும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த விபத்து குறித்து கல்லல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story