கரூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று


கரூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 5 Feb 2021 6:29 AM IST (Updated: 5 Feb 2021 6:34 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்,

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்படி சின்ன குளத்துப்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த 50 வயது பெண் மற்றும் 55 வயது ஆண், சின்ன ஆண்டாள் கோவில் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் என மொத்தம் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 3 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது 5 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 8 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story