புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 59 பேர் கைது


புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 59 பேர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2021 7:23 AM IST (Updated: 5 Feb 2021 7:26 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 59 பேர் கைது.

புதுக்கோட்டை, 

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று 3-வது நாளாக நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை வகித்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பணியில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுத்துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மற்றும் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கிராமப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இந்தநிலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி உள்பட 59 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story