தோகைமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. ஆலோசனை கூட்டம்
தோகைமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தோகைமலை,
தோகைமலையில் தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குளித்தலை எம்.எல்.ஏ. ராமர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தோகைமலைக்கு வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் பொதுமக்களை சந்திக்க தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருக்கு கட்சியின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இதில், குறைந்த பட்சம் 10 ஆயிரம் பேரையாவது கலந்து கொள்ள வைக்க வேண்டும் என 247 கிளைகழக செயலாளர்களுக்கும் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், பொது மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள், இளைஞரணி, மகளிர் அணி, தொழில்நுட்பு பிரிவு, 16 சார்பு அணி நிர்வாகிகள், ஊராட்சிமன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story