திருவரங்குளம், பொன்னமராவதியில் 2 மலைப்பாம்புகள் பிடிப்பட்டன


திருவரங்குளம், பொன்னமராவதியில் 2 மலைப்பாம்புகள் பிடிப்பட்டன
x
தினத்தந்தி 5 Feb 2021 8:57 AM IST (Updated: 5 Feb 2021 8:59 AM IST)
t-max-icont-min-icon

திருவரங்குளம், பொன்னமராவதியில் மலைப்பாம்புகள் பிடிப்பட்டன.

பொன்னமராவதி,

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் மலையாண்டி என்பவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், வனக்காப்பாளர் வித்யா, வனக்காவலர் முதலியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் சுமார் 12 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்து ஒரு சாக்குப்பையில் அடைத்து செவினி மலையில் கொண்டு சென்று விட்டனர்.

இதேபோல, திருவரங்குளம் அருகே உள்ள நா.கொத்தமங்கலம் பகுதியில் உள்ள வயல் பகுதியில் சுற்றித்திரிந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு அரிமளம் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

Next Story