ஆன்லைன் மூலம் செல்போன் வாங்கி தருவதாக ரூ.30 ஆயிரம் மோசடி
ஆன்லைன் மூலம் செல்போன் வாங்கி தருவதாக ரூ.30 ஆயிரம் மோசடி காதலியுடன் வாலிபர் கைது.
சென்னை,
சென்னை நந்தனம் ஸ்ரீராம்பேட்டையைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 23). இவர் சைதாப்பேட்டை போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், ஆன்லைன் மூலம் ரூ.30 ஆயிரம் வாங்கிக்கொண்டு, கொரியர் மூலம் செல்போன் அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி இருந்தார்.
சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தெய்வநாயகி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
மோசடியில் ஈடுபட்டதாக குரோம்பேட்டையைச் சேர்ந்த அரவிந்த் (23), அவரது காதலி நளினி (21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.29,500 மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story