மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக வந்த டாக்டர்கள்


மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக வந்த டாக்டர்கள்
x
தினத்தந்தி 5 Feb 2021 10:48 AM IST (Updated: 5 Feb 2021 10:48 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக வந்த டாக்டர்கள்

பழனி:
 மத்திய அரசு அறிமுகப்படுத்திய நவீன மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கத்தினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த டாக்டர்கள் கலந்துகொண்டு நவீன மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


அதன்படி திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த டாக்டர்கள் நேற்று மோட்டார் சைக்கிள்களில் பழனிக்கு ஊர்வலமாக வந்தனர். 

அப்போது அவர்கள், நவீன மருத்துவ முறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய சாலைகளில் வலம் வந்தனர். 

மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பழனியை சேர்ந்த டாக்டர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மோட்டார் சைக்கிள்களில் திண்டுக்கல் நோக்கி ஊர்வலமாக செல்ல உள்ளனர்.

Next Story