ஆரணி, வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி


ஆரணி, வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி
x
தினத்தந்தி 5 Feb 2021 11:32 AM GMT (Updated: 5 Feb 2021 11:34 AM GMT)

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது.

ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கோலப்போட்டி ஒன்றிய அளவில் உள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்களுக்கு நடத்தப்பட்டது. அதில் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து மகளிர் சுய உதவி குழுக்கள் பங்கேற்றன.

18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது கடமை, வாக்களிப்பது நமது உரிமை, ஆட்சியாளரை நியமிப்பது நியமிக்கப்பட வைப்பது வாக்குரிமை, ஒரு விரல் புரட்சி, நமது வாக்கை பணத்துக்கு விற்க மாட்டோம், விற்கக் கூடாது, எனப் பல்வேறு வாசகங்கள் அடங்கிய கோலப் போட்டிகள் நடத்தப்பட்டது. 

அதில் இந்திய அரசியல் அமைப்பில் உள்ளதை தேர்தல் ஆணையம் வலியுறுத்துவது கோலப் போட்டியில் இடம் பெற்று இருந்தது.

 ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வி. மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆ.பெ. வெங்கடேசன், ஒன்றிய குழு தலைவர் கனிமொழிசுந்தர், ஒன்றிய குழு துணைத்தலைவர் கே.டி. ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கவிதாபாபு, மகளிர் திட்ட அலுவலர்கள் அலுவலர்கள், ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்பட பலர் இருந்தனர். 

அதைத்தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Next Story