நாட்டறம் பள்ளி அருகே ஆற்றுப்பகுயில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


நாட்டறம் பள்ளி அருகே ஆற்றுப்பகுயில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 5 Feb 2021 5:52 PM IST (Updated: 5 Feb 2021 5:52 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம் பள்ளி அருகே ஆற்றுப்பகுயில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டறம்பள்ளி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசுக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் வந்தது. 

நாட்டறம்பள்ளி தாசில்தார் சுமதிக்கு கிடைத்த தகவலின்பேரில் வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பச்சூர் அருகில் உள்ள ஆற்றுப்பகுதியில் 40 சாக்கு மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் கைப்பற்றி, தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

Next Story