பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
குன்னூரில் பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது
குன்னூர்
அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி குன்னூரில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அல்தாபி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கல்யாணராமனை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 750 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story