அரக்கோணம் அருகே தலைமை ஆசிரியையிடம் தாலிசெயின் பறிப்பு


அரக்கோணம் அருகே தலைமை ஆசிரியையிடம் தாலிசெயின் பறிப்பு
x
தினத்தந்தி 5 Feb 2021 10:52 PM IST (Updated: 5 Feb 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

தலைமை ஆசிரியையிடம் தாலிசெயினை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார்தேடிவருகின்றனர்.

அரக்கோணம்

அரக்கோணம் வடமாம்பாக்கம் பாலாஜி நகரை சேர்ந்தவர் ஞானசேகரன். இவருடைய மனைவி சுஜா சுவர்ணலட்சுமி (வயது 51). இவர் குருவராஜப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பணி முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 பேர் வந்துள்ளனர்.

அமீர் பேட்டை - இரட்டைகுளம் ரோடு கல்குவாரி அருகில் வந்த போது சுஜாசுவர்ணலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த நபர் பிடித்து இழுத்துள்ளான். இதில் செயின் அறுந்து 2½ பவுன் மர்ம நபர் கையில் சிக்கிக்கொண்டது. அந்த செயனுடன் மர்ம நபர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்.

இது குறித்து சுஜா சுவர்ணலட்சுமி அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story