அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி: முன்னாள் ஊராட்சி தலைவர் கைது


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி: முன்னாள் ஊராட்சி தலைவர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2021 3:24 AM IST (Updated: 6 Feb 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி: முன்னாள் ஊராட்சி தலைவர் கைது

தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டி பவளத்தானுர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பநாய்க்கர் மகன் ஆறுமுகம் (வயது 60). இவர் குறுக்குப்பட்டி முன்னாள் கிராம ஊராட்சி தலைவராக இருந்தார். அப்போது பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மற்றும் தங்க நாணயங்களை வாங்கிகொண்டு யாருக்கும் வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பணம் கொடுத்தவர்களை மிரட்டியும் வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு பட்டதாரி பெண்ணிற்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணத்தை வாங்கி விட்டு அதை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார். இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story