திருச்சி விமான நிலையத்திற்கு ரூ.7½ லட்சத்தில் தானியங்கி ஏணி


திருச்சி விமான நிலையத்திற்கு ரூ.7½ லட்சத்தில் தானியங்கி ஏணி
x
தினத்தந்தி 6 Feb 2021 5:38 AM IST (Updated: 6 Feb 2021 5:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்திற்கு ரூ.7½ லட்சத்தில் தானியங்கி ஏணி வாங்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு விதமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு விதமான செயல்பாட்டிற்கு பயன்படும் வகையில் ரூ.7½ லட்சம் செலவில் புதிதாக தானியங்கி ஏணி வாங்கப்பட்டுள்ளது. அது நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த தானியங்கி ஏணி மூலம் சுமார் 60 அடி உயரம் வரை சென்று பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி ஏணியை முனைய மேலாளர்கள் சரவணன் மற்றும் அருண் ஆகியோர் சோதனை செய்தனர்.

Next Story