வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி சைக்கிளில் சென்னை செல்லும் இளைஞர்களுக்கு வரவேற்பு


வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி சைக்கிளில் சென்னை செல்லும் இளைஞர்களுக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 6 Feb 2021 6:34 AM IST (Updated: 6 Feb 2021 6:34 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி சைக்கிளில் சென்னை செல்லும் இளைஞர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரியும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி இளைஞர்கள் சிலர் சைக்கிளில் ஊர்வலமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டனர். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் ஏற்பாட்டில் சைக்கிள் ஊர்வலம் செல்லும் இளைஞர்கள் நேற்று முன்தினம் திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதிக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Next Story