தம்மம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு - கலெக்டர் ராமன் ஆய்வு
தம்மம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தம்மம்பட்டி,
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்து அதற்கான பணிகளை செய்தனர். ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.
இந்தநிலையில் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார். அப்போது கெங்கவல்லி தாசில்தார் வரதராஜ், கெங்கவல்லி அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் துரை ரமேஷ், தம்மம்பட்டி பேரூராட்சி அ.தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீகுமரன் மற்றும் அதிகாரிகள், போலீசார் உடன் இருந்தனர்.
அறிவுரை
ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் ராமன் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுரை வழங்கினார். அப்போது ஜல்லிக்கட்டு காளைகள் வரிசையாகவும், எந்த சிரமமும் இல்லாமல் வருவதற்கு உண்டான வழிகளை செய்யும்படியும், மாடுபிடி வீரர்களுக்கு ஏற்ப பாதுகாப்பு வசதி செய்யவும் அறிவுறுத்தினார்.
ஜல்லிக்கட்டையொட்டி தம்மம்பட்டி பகுதி பொதுமக்கள் தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து உள்ளனர்.
700 காளைகள்
ஜல்லிக்கட்டில் 50-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து சுமார் 700 காளைகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story