கரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 115 பேர் கைது
கரூரில் சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 115 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கிட வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும். சாலைபணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4-வது நாளாக கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் கோரிக்கைகள் குறித்து பேசினார். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 76 பெண்கள் உள்பட 115 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story